'பாகுபலி: தி எபிக்': முதல் வார இறுதியிலேயே புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனை!
செய்தி முன்னோட்டம்
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ரீமாஸ்டரிங் செய்யப்பட்டு மறுவெளியீடு செய்யப்பட்ட 'பாகுபலி: தி எபிக்' (Baahubali: The Epic) திரைப்படம், வெளியான முதல் வார இறுதியிலேயே புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இரண்டு பாகங்களை ஒருங்கிணைத்து ஒரே பாகமாக அக்டோபர் 31-ஆம் தேதி வெளியான இந்த 'பாகுபலி: தி எபிக்' திரைப்படம், முதல் வார இறுதியில் ரூ. 22.56 கோடி வசூலித்துள்ளது. இந்த வசூல், 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி: தி பிகினிங்' படத்தின் இந்தி பதிப்பின் முதல் வார இறுதி வசூலை (ரூ. 22.35 கோடி) விஞ்சி புதிய சாதனை படைத்துள்ளது.
வசூல்
தினசரி வசூல்
முதல் நாள் (வியாழன்) இந்த படம் ரூ. 9.65 கோடி (இதில் சிறப்பு வெளியீடுகளில் கிடைத்த ரூ. 1.15 கோடி உட்பட) வசூலித்தது. தொடர்ந்து, சனிகிழமை ரூ. 7.3 கோடியும், ஞாயிறு அன்று ரூ.4.46 (தோராயமாக)கோடியும் வசூலித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ரூ. 25 கோடி வசூலை இந்த திரைப்படம் நெருங்குகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BaahubaliTheEpic opening weekend — Premieres + 3 days worldwide gross stands at ₹40 crores. Huge ft. for a re-release. pic.twitter.com/6mcZ1EvVQi
— LetsCinema (@letscinema) November 3, 2025
திரைப்பட விவரங்கள்
'பாகுபலி: தி எபிக்' என்றால் என்ன?
'பாகுபலி: தி எபிக்' என்பது, 'பாகுபலி: தி பிகினிங்' (2015) மற்றும் 'பாகுபலி 2: தி கன்க்ளூஷன்' (2017) ஆகிய இரு பாகங்களையும் சுருக்கி, மறுசீரமைக்கப்பட்ட ஒரு தொகுப்பு பதிப்பாகும். அசல் படங்களில் மொத்த ஓடும் நேரம் ஐந்து மணி நேரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில், இந்தப் புதிய பதிப்பு மூன்று மணி நேரம் நாற்பத்து நான்கு நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், முன்னணி வேடத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு மறுவெளியீட்டுத் திரைப்படம் இந்தளவுக்கு வசூலிப்பது, 'பாகுபலி' பிரான்சைஸ் மீதான நீடித்த ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.