உலகளவில் ட்ரெண்ட் ஆகி வரும் 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' என்கிற இலங்கை பாடல்
விஜய் ஆண்டனியின் இசையில் வெளிவந்த நான் திரைப்படத்தில் தப்பெல்லாம் தப்பே இல்லை என்ற பாடலைப் பாடி, சினிமா துறைக்குள் நுழைந்த பொத்துவில் அஸ்மினின், சமீபத்திய ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் என்ற பாடல் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அதன் பிறகு பல படங்களில் பாடல் எழுதியுள்ள பொத்துவில் அஸ்மின், நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில் வெளி வந்த அமரகாவியம் திரைப்படத்தில் ஜிப்ரான் இசையில் 'தாகம் தீர கானல் நீரை' என பாடலை எழுதியுள்ளார். இது 2014-ல் வெளிவந்த சிறந்த 100 பாடல்களில் 4 -வது இடத்தை பிடித்தது. இவர் விஸ்வாசம், அண்ணாத்த படங்களுக்கு புரோமோ பாடல்கள் எழுதியுள்ளார்.
10 மில்லியன் வியூக்களை எட்டிய ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பாடல்
இந்நிலையில் இலங்கையில் இருந்து வெளி வந்துள்ள இவர் எழுதிய ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் என்கின்ற பாடல் அனைத்து இசை ரசிகர்களாலும் ஈர்க்கப் பட்டு சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இலங்கையில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் சனுக இப்பாடலுக்கு இசையமைத்து உள்ளனர். மற்றும் இப்பாடலை பிரபல இலங்கை பாடகி வின்டி குணதிலக் பாடியுள்ளார். யூடியூப் வலைத் தளத்தில் பதிவேற்றபட்டிருந்த இப்பாடல் ஒரு மாதக் காலத்திலேயே 10 மில்லியன் வியூக்களை எட்டியுள்ளது. முதல் முறையாக பல மில்லியன் கணக்கான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிற இலங்கை பாடல் ஆகும். இது அதிகளவில் ஒளிபரப்பாகி, டிக்டாக் வீடியோவாக பல பிரபலங்கள் பகிரப்பட்டு வருகிறது.