Loading...
Avengers Endgame Encore: இந்திய பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்க வரும் ரீ-ரிலீஸ்
செப்டம்பர் 25 அன்று வெளியாகவுள்ளது 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்'

Avengers Endgame Encore: இந்திய பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்க வரும் ரீ-ரிலீஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 14, 2026
02:01 pm

செய்தி முன்னோட்டம்

மார்வெல் ஸ்டுடியோஸின் பிரம்மாண்ட படைப்பான 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படம் கூடுதல் காட்சிகளுடன் 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்' என்ற பெயரில் மீண்டும் திரைக்கு வரத் தயாராகி வருகிறது. செப்டம்பர் 25 அன்று வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் முன்பதிவு இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரையிடலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், புக்மைஷோ தளத்தில் தொடக்க சில மணி நேரங்களிலேயே 7,750-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. அடுத்ததாக டிசம்பர் 18, 2026 அன்று வெளியாகவுள்ள 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படத்தின் முன்பதிவு அமெரிக்காவில் ஏற்கனவே $50 மில்லியனை(சுமார் ₹415+ கோடி) கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. மார்வெல் மல்டிவர்ஸின் பல்வேறு கதாநாயகர்களை ஒன்று திரட்டும் இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சிறப்பம்சங்கள்

பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு & சிறப்பம்சங்கள்

வர்த்தக பகுப்பாய்வு தகவல்களின்படி, இத்திரைப்படம் இந்தியாவில் முதல் நாளில் ₹6 கோடி முதல் ₹7 கோடி வரை வசூலிக்கும் என்றும், டிக்கெட் விற்பனை வேகம் அதிகரித்தால் தொடக்க வசூல் ₹10 கோடியைத் தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2019-இல் வெளியான இப்படத்தில் 4 நிமிட கூடுதல் காட்சிகள், புதிய போஸ்ட்-கிரெடிட்ஸ் காட்சி மற்றும் அடுத்த பெரிய படமான 'Avengers: Doomsday' பற்றிய சிறப்புப் பார்வையும் இணைக்கப்பட்டுள்ளது.

3 மணி நேரம் 10 நிமிடங்கள் இயங்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் IMAX மற்றும் 'இன்ஃபினிட்டி விஷன்' உள்ளிட்ட பிரீமியம் திரையரங்குகளில் வெளியாகிறது.

ADVERTISEMENT