நாளை முதல் அவதார் 2: உலகமெங்கும் உள்ள 52 ஆயிரம் திரையரங்களில் வெளியாகிறது.
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் உருவான அவதார் 2 என்ற திரைப்படம் நாளை முதல் வெளியாக உள்ளது. இப்படம் 160 மொழிக்களில் டப்பிங் செய்யப்பட்டு உலகமெங்கும் உள்ள 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. 2009-ம் ஆண்டு அவதார் படத்தின் முதல் பாகம் வெளியானது. இந்த படத்தின் வசூல் சாதனையை வேறு எந்த படமும் இதுவரை முறியடிக்க படவில்லை. 13 வருடங்களுக்கு பிறகு நாளை வெளியாகும் அவதார்- 2 வசூல் சாதனை செய்யும் என அனைவராலும் எதிர்பார்க்க படுகிறது. இந்தியாவில் மட்டும் இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்கள் 'அவதார் 2' படத்தை வெளியிடுகின்றன.
வசூல் சாதனை படைக்குமா 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்'?
பிரம்மாண்ட செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் சாம் வோர்த்திங்டன், ஜோ சல்டனா, சிகர்னி வேவர், இசுடீபன் லாங், போன்றோர் நடித்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த படத்தின் வெளியீட்டுக்காக எதிர்ப்பார்த்து கொண்டு இருந்த நிலையில் இந்த படம் நாளை முதல் உலகம் எங்கும் வெளியாகிறது. இந்தியாவில் இந்த படத்துக்கான முன்பதிவு சமீபத்தில் தொடங்கி இதுவரையில் 10 கோடி ரூபாய்க்கும் மேலாக டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து இன்னும் மூன்று பாகங்கள் வெளியாக உள்ளன. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிற 'அவதார்- 2: தி வே ஆஃப் வாட்டர்' சர்வதேச அளவில் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.