LOADING...
மீண்டும் அப்பாவாகிறார் அட்லீ! க்யூட் புகைப்படங்களுடன் இரண்டாவது தாய்மையை அறிவித்த பிரியா அட்லீ
மீண்டும் அப்பாவாகிறார் இயக்குநர் அட்லீ

மீண்டும் அப்பாவாகிறார் அட்லீ! க்யூட் புகைப்படங்களுடன் இரண்டாவது தாய்மையை அறிவித்த பிரியா அட்லீ

எழுதியவர் Venkatalakshmi V
Jan 20, 2026
12:47 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அட்லீ மற்றும் அவரது மனைவியும், தயாரிப்பாளருமான பிரியா, தாங்கள் இரண்டாவது முறையாக பெற்றோராக போவதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். இத்தம்பதியினருக்கு ஏற்கனவே 'மீர்' என்ற மகன் உள்ள நிலையில், தற்போது குடும்பத்தில் இணையவிருக்கும் புதிய உறுப்பினர் குறித்த தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். குடும்பத்தினருடன் பிரியா அட்லீ தனது கருவுற்ற வயிற்றைக் காட்டியபடி இருக்கும் புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர்களது மகன் மீர் மற்றும் செல்லப் பிராணிகளும் இடம்பெற்றுள்ளன. "எங்கள் இல்லம் இன்னும் கூடுதல் அரவணைப்பைப் பெறப்போகிறது. ஆம், நாங்கள் மீண்டும் கருவுற்றுள்ளோம். உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் அன்பும் எங்களுக்குத் தேவை," என்று பிரியா உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வாழ்த்துகள்

அட்லீக்கும், பிரியாவுக்கும் குவியும் வாழ்த்துகள்

இந்தச் செய்தி வெளியானதை தொடர்ந்து, திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தம்பதியினருக்குத் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகை சமந்தா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் இவர்களின் பதிவிற்கு தங்களின் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். 2014-ஆம் ஆண்டு திருமணமான இந்த தம்பதியினர், கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தங்களின் முதல் மகனை வரவேற்றனர். தற்போது 'ஜவான்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அட்லீ தனது அடுத்த படைப்பிற்கு தயாராகி வரும் வேளையில், தனிப்பட்ட வாழ்விலும் இந்த மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அட்லீ தற்போது சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், அல்லு அர்ஜுன் உடன் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார்.

Advertisement