வணங்கான் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு பதிலாக அதர்வா நடிக்க இருக்கிறார்?
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகராக அறியப்பட்ட 'சூர்யா' 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானவர். ப்ரண்ட்ஸ், நந்தா, மௌனம் பேசியதே. காக்க காக்க, பிதாமகன், கஜினி, சில்லுனு ஒரு காதல், 7-ம் அறிவு, சூரரை போற்று, ஜெய் பீம் போன்ற பல்வேறு நடிப்பின் மூலம் முன்னணி நடிகராக திகழ்கிறார். 'நந்தா' படத்தின் மூலம் இவர் இயக்குனர் பாலாவுடன் பணிபுரிந்து அதன் பிறகு பல்வேறு வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்த படம் 'வணங்கான்' படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரித்து வந்தது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின் போதே இயக்குனர் பாலாவுக்கு நடிகர் சூர்யாவிற்கும் கருத்துவேறுபாடு இருந்தாக கூறப்படுகிறது.
பாலா இயக்கி வரும் 'வணங்கான்' - சூர்யா விலகுகிறார் என அறிவிப்பு
இதனிடையில் 'வணங்கான்' படத்தில் இருந்து சூர்யா விலகுகிறார் எனவும் இப்படத்தின் பணிகள் சூர்யா விலகினாலும் தொடரும் என பாலா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை சூர்யா தரப்பும் உறுதிப் படுத்தியத. இதனை அடுத்து 'பானா காத்தாடி' மூலம் தமிழ் திரை உலத்திற்கு நடிகராக அறிமுகம் ஆன அதர்வா பாலா இயக்கி வரும் 'வணங்கான்' படத்தில் நடிகர் சூர்யாவுக்கு பதிலாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இப்படத்தின் தயாரிப்பினை பாலாவின் தயாரிப்பு நிறுவனமான 'பி ஸ்டுடியோஸ்' தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதர்வாவிடம் இப்படத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது எனினும் இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இது வரையில் வெளியாகவில்லை.