Page Loader
கவினுக்கு பதிலாக மற்றொரு விஜய் டிவி பிரபலத்தை தேடி போன தயாரிப்பாளர்
கவின் வெளியேறியதற்கான காரணம் தெரியாத நிலையில், அவர் கதாபாத்திரத்தில் அஸ்வின் நடிக்கப்போவதாக செய்தி

கவினுக்கு பதிலாக மற்றொரு விஜய் டிவி பிரபலத்தை தேடி போன தயாரிப்பாளர்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 28, 2023
04:02 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் டிவி மூலம் பிரபலமானவர்கள் கவினும், அஸ்வின் குமார் லக்ஷ்மிகாந்தனும். கவின், கனா காணும் காலங்கள் மூலம் அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து தாயுமானவன், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்து பிரபலம் ஆனார். அதன் பிறகு ஒன்றிரண்டு படங்களில் நடித்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம், மீண்டும் மக்களிடத்தில் பிரபலம் ஆனார். அதன் பிறகு, லிப்ட் படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து 'டாடா' என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து 'ஊர் குருவி' என்ற படத்தில் கவின் நடிப்பதாக இருந்தது.

திரைப்பட மாற்றம்

கவினின் ரோலில் அஸ்வின்?

'ஊர் குருவி' படத்தின் அறிவிப்பு வெளியாகி சில ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது, சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகுகிறார் என செய்திகள் வெளியானது. இதனை அடுத்து, அவர் இடத்தில் அஸ்வின் குமார் நடிக்கபோவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அஸ்வின் 'குக்-கு வித் கோமாளி' என்ற ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர் கூட்டத்தை ஈர்த்தார். அதனை தொடர்ந்து பல மியூசிக்கல் ஆல்பங்களில் நடித்தார். ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியவர், சமீபத்தில் வெளியான செம்பி படத்தில் பாராட்டுக்களை பெற்றுள்ளார். இருப்பினும், திரையுலகில் அழுந்த கால் பாதிக்க காத்திருக்கும் அஸ்வின், இந்த படத்தின் மூலம் அதை சமன்செய்வார் எனவும் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். எனினும் இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.