Page Loader
மோசடி புகாரில் சிக்கிய 'பிக் பாஸ்' அபிநய்யின் மனைவி; தலைமறைவு எனத்தகவல்
அபிநய் தனது மனைவி அபர்ணாவுடன்

மோசடி புகாரில் சிக்கிய 'பிக் பாஸ்' அபிநய்யின் மனைவி; தலைமறைவு எனத்தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 28, 2023
01:10 pm

செய்தி முன்னோட்டம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 -இல் பங்கு பெற்று பிரபலமானவர் அபிநய் வாடி. இவர் மறைந்த நடிகர்களான, ஜெமினி கணேசன்- சாவித்திரி ஆகியோரின் மகள் வழி பேரன் ஆவர். பிக் பாஸ்-ல் பங்கு பெறுவதற்கு முன்னாள் இவர், ராமானுஜன், சென்னை 600028 -இன் இரண்டாம் பாகம், மற்றும் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். இருப்பினும், பிக் பாஸ் மூலமே அவர் பிரபலமானார். இவரது காதல் மனைவி அபர்ணா. இவர் ஒரு பொடிக் நடத்தி வருகிறார். தன்னுடைய கடைக்கான உடைகளை தைத்து தருவதற்கு, மாம்பலம் ஆற்காட் சாலையில், டைலரிங் யூனிட் நடத்தி வரும் மஞ்சு என்பவரை அணுகி உள்ளார் அபர்ணா. பிசினஸ் தொடர்பான உடைகளை அபர்ணாவின் தேவைக்கு ஏற்ப சப்ளை செய்துள்ளார் மஞ்சு.

மோசடி புகார்

மெடிக்கல் சீட் வாங்கி தருவதாக ஏமாற்றினாரா அபர்ணா?

இதனிடையே, சென்ற ஆண்டு மஞ்சுவின் மகளுக்கு, அவர் ஆசைப்பட்ட மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என அபர்ணாவுடன் வருத்தத்துடன் தெரிவித்ததாகவும் அறியப்படுகிறது. அதற்கு அபர்ணா, தன்னால் அந்த கல்லூரியில் சீட் வாங்கி தரமுடியும் எனவும், அதற்கு 20லட்சம் செலவாகும் எனவும் கூறியுள்ளார். முதலில் 5லட்சத்தை, தன்னுடைய நண்பர் அக்கௌன்ட்டிற்கு அனுப்புமாறும், மீதி பணத்தை கல்லூரியில் சேர்ந்த பிறகு செலுத்தினால் போதும் எனக்கூறியுள்ளார். அதற்கு கல்லூரி பெயரிட்டு, ஒரு சான்றிதழை, அபர்ணா வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், கல்லூரிக்கு சென்ற பிறகுதான், அது ஒரு போலி சான்றிதழ் என தெரியவந்ததாகவும், இதனையடுத்து, அபர்ணாவிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டதற்கு, சரியான பதில் வரவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அபர்ணாமேல் மோசடி புகார் பதிந்துள்ளார் மஞ்சு