Page Loader
பிக்பாஸ் தமிழ்: பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் அஸிம்; இரண்டாம் இடத்தை வென்ற விக்ரமன்
பிக்பாஸ் தமிழ் 6 போட்டியில் வென்ற அஸிம்

பிக்பாஸ் தமிழ்: பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் அஸிம்; இரண்டாம் இடத்தை வென்ற விக்ரமன்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 23, 2023
11:50 am

செய்தி முன்னோட்டம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிகழ்ச்சியின், 6வது சீசனின் ஃபைனல்ஸ், நேற்று நடைபெற்றது. அதில், இந்த சீசனின் வெற்றியாளராக நடிகர் அஸிம் அறிவிக்கப்பட்டார். இரண்டாம் இடத்தில் விக்ரமனும், மூன்றாம் இடத்தில் ஷிவினும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அக்டோபர் மாதம், 21 போட்டியாளர்களுடன் துவங்கபட்ட இந்நிகழ்ச்சியை, கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். மக்கள் ஓட்டின் படி, ஒவ்வொரு வாரமும், ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவர் என்பது அனைவரும் அறிந்ததே. கடைசி வாரத்தில், 5 போட்டியாளர்கள் - கதிரவன், நந்தினி, அஸிம், விக்ரமன் மற்றும் ஷிவின் மட்டுமே எஞ்சி இருந்தனர். அவர்களுள் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட அஸிமிற்கு, ரூ.50 லட்சம் பரிசுத் தொகையும், காரும் பரிசாக வழங்கப்படுகிறது என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர்