பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இனி கமல்ஹாசன் தொடரப் போவதில்லையா?
நடிகர் கமல்ஹாசன் சின்னத்திரையின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான, ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக முதல் முறையாக சின்னத்திரையில் அறிமுகமானார்! ஆறு சீசன்களை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வந்திருக்கிறார். இதை தவிர்த்து பிக்பாஸ் அல்டிமேட் என்று ஒரு ஸ்பெஷல் சீசனையும் முதல் நான்கு வாரங்கள் தொகுத்து வந்தார். நடிகர், பன்முகக் கலைஞர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்ற ஒரே காரணத்துக்காகவே, இந்த நிகழ்ச்சிக்கு எக்கச்சக்கமாக ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், விக்ரம் திரைப்பட ஷூட்டிங் காரணமாக ஆண்டின் தொடக்கத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் நான்கு வாரத்திலேயே வெளியேறினார். அதைத்தொடர்ந்து நடிகர் சிம்பு தொகுப்பாளராக பங்கேற்று மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்!
டிஆர்பி பிரச்சனையா அல்லது ஒரே மாதிரியாக இருப்பது சலிப்பாக இருக்கிறதா!
அதிகாரபூர்வமாக கூறப்படவில்லை என்றாலும், தொகுப்பாளராக ஒரே மாதிரியாக இருப்பது சலிப்பாக இருக்கிறது, மற்ற வேலைகளின் சுமை, திரைப்படங்களில் கூடுதல் கவனம் செலுத்தலாம் என்று கமல்ஹாசன் நினைப்பதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் தமிழின் 7 ஆம் சீசனுக்கு மிகப்பெரிய தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த சீசன் பெரிய அளவில் மக்களிடையே சேரவில்லை, டிஆர்பி அடி வாங்குகிறது என்பது தான் கமல்ஹாசன் வெளியேற காரணமாக இருக்கலாம். தொகுப்பாளர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பிக்பாஸ் சீசன் 6 ல் இருக்கும் போட்டியாளர்களை எச்சரித்த நிலையில் இனி எத்தனை வாரங்கள் தொடர்வார் என்பது தெரியவில்லை! ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 6 கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் கமல்ஹாசன் விலகி, மீண்டும் சிம்பு தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.