
அசோக் செல்வன் நடிக்கும் 'எமக்கு தொழில் ரொமான்ஸ்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
செய்தி முன்னோட்டம்
வளர்ந்துவரும் நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் 'எமக்கு தொழில் ரொமான்ஸ்' நகைச்சுவை-காதல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது.
இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று நடிகர் விஜய் சேதுபதி, ஆர்யா உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிட்டனர்.
புதுமுக இயக்குநரான பாலாஜி கேசவன் இப்படத்தை இயக்கியுள்ளார். T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக அவந்திகா மிஸ்ரா நடித்துள்ளார். அதுதவிர, நடிகை ஊர்வசி ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து மக்களின் மனதில் இடம் பிடித்துவரும் அசோக் செல்வனின் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
'எமக்கு தொழில் ரொமான்ஸ்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Very happy to launch the first look of #EmakkuThozhilRomance , More Updates very soon.
— VijaySethupathi (@VijaySethuOffl) March 15, 2024
⭐ing @AshokSelvan @Avantika_mish
@nivaskprasanna @ThirumalaiTv #MsBhaskar #Oorvasi #TCreation @teamaimpr pic.twitter.com/fVzB9yUTMg