மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ஜான் டோ டிரெய்லர் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான வசீகரக் கம்பீரக் குரலாலும் தேர்ந்த நடிப்பாலும் தனி முத்திரை பதித்து வரும் முன்னணி நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில், இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜான் டோ' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துப் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், உலகளவில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள இத்திரைப்படம் வரும் நவம்பர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மதுமிதா இயக்கம்
அர்கா மீடியா தயாரிப்பு
'கருப்பந்துறை' உள்ளிட்ட தரமான படைப்புகளை இயக்கிய இயக்குநர் மதுமிதா இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
அர்ஜுன் தாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக சஞ்சனா நடராஜன் நடித்துள்ளார்.
மேலும் சிருஷ்டி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் களம் கண்டுள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற 'பாகுபலி' திரைப்படங்களைத் தயாரித்த முன்னணி நிறுவனமான அர்கா மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரசாத் தேவினேனி மற்றும் சோபு யார்லகட்டா ஆகியோர் இப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளனர்.
இயக்குநர் மதுமிதாவுடன் இணைந்து நிக்கோலஸ் செவாலியர் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார்.
நவம்பர் 13 ரிலீஸ்
தொழில்நுட்பக் கலைஞர்கள்
படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார். பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விஜய் வெங்கடராமன் படத்தொகுப்புப் பணிகளையும், தினேஷ் சுப்பராயன் சண்டைப் பயிற்சிகளையும் கவனித்துள்ளனர்.
வெளியீட்டுக்கு முந்தைய வர்த்தகத்திலும் முத்திரை பதித்துள்ள இப்படத்தின் டிஜிட்டல் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.
மேலும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை 'ஜீ தமிழ்' தொலைக்காட்சி நிறுவனம் தன்வசப்படுத்தியுள்ளது.
படம் திரைக்கு வர இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த டிரெய்லரில், மர்மங்கள் நிறைந்த பரபரப்பான புலனாய்வு காட்சிகள், அர்ஜுன் தாஸின் அழுத்தமான நடிப்பு மற்றும் பின்னணி இசை ஆகியவை ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படம் வரும் நவம்பர் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Who is John Doe? The question that keeps getting bigger
— Arka Mediaworks (@arkamediaworks) November 3, 2026
Take a step closer to uncovering the mystery#JohnDoe Trailer out now#JohnDoe releases this November 13 in cinemas near you :)
🔗https://t.co/vfPL4hKIbB
Written & Directed by @memadhumita