Page Loader
எஸ்.ஜே. சூர்யாவின் 'கில்லர்' படத்திற்கு இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்
SJ சூர்யாவின் 'கில்லர்' படத்திற்கு இசையமைக்கிறார் A.R. ரஹ்மான்

எஸ்.ஜே. சூர்யாவின் 'கில்லர்' படத்திற்கு இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 07, 2025
11:34 am

செய்தி முன்னோட்டம்

மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள எஸ்.ஜே. சூர்யா தனது புதிய திரைப்படமான 'கில்லர்'-க்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது 15 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைய போவதை குறிக்கிறது. ARR- SJ சூர்யாவின் வெற்றி கூட்டணி இந்த படத்திலும் சரவெடியாக இருக்கும் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு 'நானி' (தெலுங்கு) மற்றும் அதன் தமிழ் பதிப்பான 'நியூ' திரைப்படங்களில் முதல் முறையாக இணைந்தனர். பின்னர் இந்த ஜோடி SJ சூர்யா நடித்த 'அன்பே ஆருயிரே' படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். அதன் பின்னர் இப்போது 'கில்லர்' மூலமாக இந்த கூட்டணி மீண்டும் உருவாக உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

'கில்லர்' படத்தை பற்றிய விவரங்கள்

கோகுலம் கோபாலனின் தலைமையில், SJ சூர்யாவின் ஏஞ்சல் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து படம் உருவாகின்றது. இது ஸ்ரீ கோகுலம் மூவீஸ்-ன் முதல் தமிழ்த் தயாரிப்பாகும். முன்னதாக சினிமா எக்ஸ்பிரஸிற்கு அளித்த பேட்டியில்,"ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்துக்கும் என் குஷிக்கும் இடையிலான கலவை இது. இது தண்ணீரும் எண்ணெயும் கலப்பது போல தோன்றலாம். ஆனால் திரைக்கதைதான் இதை சீராக ஒரே பாதையில் பயணிக்கச் செய்கிறது," என SJ சூர்யா கூறினார். இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. 1999-ஆம் ஆண்டு 'வாலி' மூலம் இயக்குநராக அறிமுகமான SJ சூர்யா, தொடர்ந்து குஷி, நியூ உள்ளிட்ட படங்களை இயக்கினார். 'கில்லர்' அவரது இயக்கத்தில் உருவாகவுள்ள 10வது படமாகும்.