பாலிவுட்டை விட்டு வெளியேறினார் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்; என்ன காரணம்?
செய்தி முன்னோட்டம்
பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் மும்பை நகரை விட்டு இடம்பெயர்ந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே பாலிவுட்டில் நிலவி வரும் அதிகார மோதல், பகட்டுத்தன்மையை வெறுப்பதாக வெளிப்படையாக கூறி வந்த இயக்குனர் தற்போது பாலிவுட்டை விட்டு முற்றிலுமாக வெளியேறியதாக கூறப்படுகிறது.
தென்னிந்தியாவிற்கு இடம்பெயர்வதற்கான தனது தீர்மானத்தை சில மாதங்களுக்கு முன்பு திரைப்படத் தயாரிப்பாளர் வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் "நான் மும்பையை விட்டு வெளியேறிவிட்டேன்," என்று அவர் சிரித்துக் கொண்டே, தனது புதிய வீட்டின் முதல் வாடகையை சமீபத்தில் செலுத்தியதாகவும் கூறினார்.
தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியின்படி, அனுராக் காஷ்யப் பெங்களூரு நகரில் குடியேறி இருக்கலாம் என கூறப்படுகிறது.
காரணங்கள்
பாலிவுட்டை விட்டு அவர் வெளியேறியதற்கான காரணங்கள்
"நான் சினிமாக்காரர்களிடமிருந்து விலகி இருக்க விரும்புகிறேன். இந்தத் துறை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறிவிட்டது. எல்லோரும் நம்பத்தகாத இலக்குகளைத் துரத்துகிறார்கள், அடுத்த ₹500 மற்றும் ₹800 கோடி படத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். படைப்பு சூழல் போய்விட்டது."
குறுகிய பார்வை கொண்ட இந்தி திரைப்படத் துறையின் மீதான ஏமாற்றம், தயாரிப்பாளர்கள் மற்றும் தளங்களிடையே ஆபத்து வெறுப்பு, சவாலான மற்றும் உற்சாகமான வேலையை விட ஆடம்பர வாழ்க்கை முறையை விரும்பும் பாதுகாப்பற்ற நடிகர்கள் போன்ற காரணங்களுக்காக அவர் வெளியேறியிருக்க கூடும் என செய்திகள் கூறுகின்றன.
அனுராக் காஷ்யப் கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை-2 படத்தில் நடித்திருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | பாலிவுட்டில் இருந்து வெளியேறிய நடிகர் அனுராக் காஷ்யப் #SunNews | #AnuragKashyap | #Bollywood pic.twitter.com/Sb64MOSh46
— Sun News (@sunnewstamil) March 6, 2025