LOADING...
ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் முடிந்தது 

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் முடிந்தது 

எழுதியவர் Sindhuja SM
Jul 13, 2024
09:18 am

செய்தி முன்னோட்டம்

கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் நேற்று மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரம் கிம் கர்தாஷியன், அவரது சகோதரி க்ளோ, நைஜீரிய ராப்பர் ரெமா, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர், சவுதி அராம்கோ சிஇஓ அமின் நாசர், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் ஜே லீ மற்றும் ஜிஎஸ்கே பிஎல்சி தலைமை நிர்வாகி எம்மா வால்ம்ஸ்லி உள்ளிட்ட உலக வர்த்தக அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியா 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் 

அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அஜய் தேவ்கன், ரன்பீர் கபூர், ஆலியா பட், டைகர் ஷ்ராஃப் மற்றும் வருண் தவான் உட்பட கிட்டத்தட்ட அனைத்து உயர்மட்ட பாலிவுட் நடிகர்களும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். தென்னக சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த், ராம் சரண், மகேஷ் பாபு ஆகியோரும் தங்கள் குடும்பத்தினரோடு கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி போன்ற ஜாம்பவான்கள் முதல் முன்னாள் கிரேட் கிரிஷ் ஸ்ரீகாந்த், தற்போதைய நட்சத்திரங்கள் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் வரையிலான இந்திய கிரிக்கெட் வீரர்களும் இருந்தனர்.