LOADING...
1958 முதல் 1974 வரை, தான் பார்த்த படங்களை பற்றி 'ஜெர்னலிங்' செய்த தாத்தா; வைரலாகும் ட்வீட்
தான் பார்த்த படங்களை பற்றி 'ஜெர்னலிங்' செய்த தாத்தா

1958 முதல் 1974 வரை, தான் பார்த்த படங்களை பற்றி 'ஜெர்னலிங்' செய்த தாத்தா; வைரலாகும் ட்வீட்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 27, 2023
02:23 pm

செய்தி முன்னோட்டம்

வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும், குறிப்பெடுப்பது சிலரின் வழக்கம். அப்படி ஒரு தாத்தா எழுதிய டைரி குறிப்பு தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. 1958 முதல் 1974 வரை தேதியிடப்பட்ட அந்த 'லாக் புக்'கில், அவர் பதிவு செய்திருப்பது, அன்றாட நிகழ்வுகளையோ, தினசரி செலவுகளையோ அல்ல. மாறாக தான் கொட்டகையில் கண்டு ரசித்த படங்களின் பெயரையும், அது சார்ந்த மற்ற விவரங்களையும், 'ஜெர்னலிங்' செய்துள்ளார். அதை தற்போது, அவரின் பேரன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். முத்துமுத்தான கையெழுத்தில், படத்தின் பெயர், தேதி, தான் பார்த்த கொட்டகையின் பெயர், படத்தின் நீளம் மற்றும் டிக்கெட் விலை என அனைத்தையும் பதிவிட்டுள்ளார் அந்த தாத்தா. அதில், ஜேம்ஸ் பாண்ட் போன்ற சில ஆங்கில படங்களும் அடங்கும்.

ட்விட்டர் அஞ்சல்

'ஜெர்னலிங்' செய்த தாத்தா

ட்விட்டர் அஞ்சல்

ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட MGR படம்!

ட்விட்டர் அஞ்சல்

ரீலிஸ் நீளம் குறித்து பதிவிட்ட தாத்தா