Page Loader
#தலைவர்170 திரைப்படத்திற்கு முன் அமிதாப்பச்சன்  நடிக்க இருந்த தமிழ் படம் குறித்து தெரியுமா?
'உயர்ந்த மனிதன்' திரைப்படம் கைவிடப்பட்டது தெரிந்தவுடன் தான் அழுததாக எஸ்ஜே சூர்யா கூறியிருந்தார்.

#தலைவர்170 திரைப்படத்திற்கு முன் அமிதாப்பச்சன்  நடிக்க இருந்த தமிழ் படம் குறித்து தெரியுமா?

எழுதியவர் Srinath r
Oct 11, 2023
12:43 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் #தலைவர்170 என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் 170வது திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனமான லைகா சமீபத்தில் வெளியிட்டது. இது அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் நேரடி தமிழ்படம். ஆனால் இதற்கு முன்பே அவர் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, அந்தத் திரைப்படம் தடைப்பட்டது பலரும் அறியாதது. கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் தமிழ்வாணன் இயக்கத்தில், அமிதாப்பச்சன் 'உயர்ந்த மனிதன்' என்ற திரைப்படத்தில், எஸ்ஜே சூர்யாவிற்கு தந்தையாக நடிப்பதாக இருந்தது. இயக்குனர் தமிழ்வாணன், எஸ்ஜே சூர்யாவை வைத்து சில காட்சிகளையும் படமாக்கி இருந்தார். பின்னர் படக்குழுவினரிடம் ஒன்றுபட்ட சிந்தனை இல்லாததால் இந்த படம் கைவிடப்பட்டது. படம் கைவிடப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

அமிதாப்பச்சன் உடன் நடிப்பது குறித்து, எஸ்ஜே சூர்யா கடந்த 2019 ஆம் ஆண்டு பகிர்ந்திருந்த ட்விட்