
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பிறந்தநாள்- நள்ளிரவில் வாழ்த்துச் சொல்ல வீட்டின் முன் கூடிய ரசிகர்கள்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் இன்று தனது 81வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமிதாப்பச்சனுக்கு வாழ்த்து சொல்ல மும்பையின் ஜுஹு பகுதியில் உள்ள அவர் வீட்டின் முன் ரசிகர்கள் இரவு 11 மணி முதல் கூட தொடங்கினர்.
தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்த ரசிகர்களுக்கு இரவு 12:10 மணி அளவில் அமிதாப்பச்சன் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
அவர் தன் வீட்டில் இருந்து வெளிவந்து ரசிகர்களை நோக்கி கைசைத்து, சிலருடன் கைகுலுக்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அமிதாப்பச்சனுக்காக பாட்டுப்பாடி, நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ட்விட்டர் அஞ்சல்
பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த அமிதாப்பச்சன்
Birthday boy Amitabh Bachchan makes a surprise midnight appearance outside his home #BigB #AmitabhBachchan pic.twitter.com/IEksU2bktO
— BollyHungama (@Bollyhungama) October 10, 2023