பிக்பாஸ் ரியல் ஜோடி அமீர்-பாவனிக்கு நவம்பரில் திருமணமாம்!
பிக்பாஸ் தமிழில் கலந்துகொண்டு தமிழ் மக்களிடத்தில் பிரபலமானவர்கள் அமீர் மற்றும் பாவனி. இவர்களின் திருமணம் நவம்பர் மாதம் நடக்கவுள்ளதாக ஒரு பேட்டியில் இவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக பாவனி, விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி என்கிற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த தொடரில் தன்னுடன் நடித்த பிரதீப் குமாரை காதல் திருமணம் செய்து கொண்டார், பாவனி. எனினும் திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் தனித்து இருந்த பாவனியை, பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது ப்ரொபோஸ் செய்தார் அமீர். அமீரின் காதலை நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஏற்றுக்கொண்டார் பாவனி. அதன்பின்னர் லிவிங் டுகெதரில் இருந்த இந்த ஜோடி, தற்போது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளது.