சிவகார்த்திகேயன் பிறந்தநாள்: அமரன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு
நேற்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள #SK21 திரைப்படத்தின் பெயர் வெளியான நிலையில், இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு 'அமரன்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடப்பட்டுள்ளது. பிப்ரவரி-17, நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் தலைப்பு நேற்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு ராணுவ வீரர் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவருடன் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். இவர்கள் இருவரின் டான்ஸை காண தற்போதே ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இப்படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் தீவிர உடற்பயிற்சி செய்துள்ளார் என சமீபத்தில் வைரலாக பகிரப்பட்ட வீடியோ காட்டுகிறது.