சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நடிக்கிறாரா அல்லு அர்ஜுன்?
செய்தி முன்னோட்டம்
சஞ்சய் லீலா பன்சாலியின் 'லவ் அண்ட் வார்' படத்தில் அலியா பட், ரன்பீர் கபூர், விக்கி கவுஷல் ஆகியோருடன் அல்லு அர்ஜுன் நடிக்கிறார் என்ற செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது.
இது பற்றி செய்தி வெளியிட்டுள்ள ஹிந்துஸ்தான் டைம்ஸ், இது உறுதிப்படுத்தப்பட்ட செய்தி இல்லை என்றாலும், சஞ்சய் லீலா பன்சாலியுடன் அல்லு அர்ஜுனின் சமீபத்திய சந்திப்பு, இந்த ஊகத்தை மேலும் பலப்படுத்திகிறது என குறிப்பிடுகிறது.
அல்லு அர்ஜுன் தற்போது தனிப்பட்ட வாழ்க்கையில் அனுபவித்து வரும் கடினமான சூழல் பற்றி அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் அவர், மும்பையில் உள்ள இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகத்திற்கு வந்திருந்தது தொழில் முறையான சந்திப்பாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் எனவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#AlluArjun at Director #SanjayLeelaBhansali Office in Mumbai today. pic.twitter.com/V9YR7afYPk
— Gulte (@GulteOfficial) January 9, 2025
திட்டம்
பன்சாலி தற்போது எடுத்து வரும் திரைப்படம் பற்றிய விவரங்கள்
பாலிவுட்டின் மிகப்பெரிய இயக்குனராக கருதப்படுபவர் சஞ்சய் லீலா பன்சாலி.
இவர் தேவதாஸ், ராம்- லீலா, பத்மாவதி, கங்குபாய் உள்ளிட்ட பல வெற்றி படங்களையும், ஹீரமாண்டி என்ற வெப் தொடரையும் இயக்கியவர்.
அவருடைய படங்கள் பிரமாண்ட செட்டிங்கிற்காகவும், அழுத்தமான திரைக்கதைக்காகவும் அறியப்படுபவை. அவர் தற்போது லவ் அண்ட் வார் என்ற படத்தை எடுத்து வருகிறார்.
இப்படம், 2026 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆலியா பட், ரன்பீர் கபூர் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் முன்னணி வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் இணையான நாயகனாக அடியெடுத்து வைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.