அடுத்த செய்திக் கட்டுரை

'புஷ்பா 2: தி ரூல்' டீஸர் தேதி பற்றி தகவல் வெளியானது
எழுதியவர்
Venkatalakshmi V
Apr 01, 2024
03:39 pm
செய்தி முன்னோட்டம்
தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படத்தின் டீஸர் எப்போது வெளியாகும் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
'புஷ்பா: தி ரைஸின்' மாபெரும் வெற்றிக்குப் பிறகு அடுத்த பதிப்பான, புஷ்பா-2 அதாவது, 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படத்தின் அநேக படப்பிடிப்புகள் நிறைவு பெற்றுள்ளது.
முதல் படம் அல்லு அர்ஜுனுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று தந்ததும், இரண்டாம் படத்தினை சுற்றியுள்ள எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில், 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் டீஸர் மற்றும் போஸ்டரை, அல்லு அர்ஜுன் பிறந்தநாளான ஏப்ரல் 8 அன்று வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
'புஷ்பா 2: தி ரூல்' டீஸர்
AApril is here!! 🔥🪓🔱#Pushpa2TheRule https://t.co/D0uoNDVI7b
— Pushpa (@PushpaMovie) March 31, 2024