Page Loader
அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் இணையப்போவதாக கூறப்படும் ஹாலிவுட் நடிகர்கள்
அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் ஹாலிவுட் நடிகர்கள்?

அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் இணையப்போவதாக கூறப்படும் ஹாலிவுட் நடிகர்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 10, 2025
02:49 pm

செய்தி முன்னோட்டம்

'புஷ்பா' படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன், இயக்குனர் அட்லியுடன் இணைந்து ஒரு மெகா பட்ஜெட் அறிவியல் புனைகதை படத்தில் நடிக்கிறார். நடிகர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், வில் ஸ்மித், டுவைன் ஜான்சன் (எ) தி ராக் உள்ளிட்ட பெரிய நடிகர்களும், ரஷ்மிகா மந்தனா, பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளிட்ட இந்திய நடிகர்களும் இந்த படத்தில் நடிக்க பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு அல்லு அர்ஜுனின் பிறந்தநாளன்று, தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை பகிர்ந்து கொண்டது. ஹாலிவுட் தரத்திற்கு இணையான இந்தப் படத்திற்காக பல ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் மற்றும் புதிய யுக தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் எனவும் அந்த அறிவிப்பு வெளிப்படுத்தியது.

ஹாலிவுட் நடிகர்கள்

வில் ஸ்மித் மற்றும் டுவைன் ஜான்சன் இந்த படத்தில் நடிப்பார்களா?

'AA22xA6' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க ஹாலிவுட் நடிகர்களுடன் அட்லீ மற்றும் அவரது குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், வில் ஸ்மித் தான் முன்னணி போட்டியாளர். முக்கிய வில்லனாக நடிக்க அட்லீ, ஸ்மித்தை அணுகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒப்பந்தம் தோல்வியடைந்தால், மாற்று நடிகரை தேடும் பணியில் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, இந்தியா டுடே வெளியிட்ட செய்திப்படி, அட்லீ, தி ராக் என்று பிரபலமாக அழைக்கப்படும் டுவைன் ஜான்சனையும் நடிக்க வைக்க பரிசீலித்து வருகிறார். இருப்பினும், நடிகர்கள் தேர்வு மற்றும் இந்த திட்டம் குறித்த பிற விவரங்கள் குறித்து தயாரிப்பாளர்கள் வாய் திறக்கவில்லை.