ஆஸ்கார் விருதுகள் 2023: 'Navalny'-இடம் 'All That Breathes' விருதைத் தவறவிட்டது
உலகெங்கிலும் உள்ள சினிமா பிரபலங்களும், சினிமா ரசிகர்களும் ஒருசேர ஆவலுடன், எதிர்பார்ப்பது இந்த ஆஸ்கார் விருதை தான். தங்கள் படைப்பிற்கு கிடைத்த உயரிய அங்கீரகமாக அவர்கள் இந்த விருதை கருதுகிறார்கள். அப்படிபட்ட முக்கியத்துவம் வாய்ந்த, ஆஸ்கார் விருதுகள், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இந்திய நேரப்படி, (மார்ச் 13) இன்று காலை 5:30 மணிக்கு துவங்கிய இந்த விழா நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்தியாவிலிருந்து இம்முறை மூன்று திரைப்படங்கள் ஆஸ்கார் விருதிற்கு தேர்வாகி இருந்தது. ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில், RRR படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலும், 'ஆல் தட் பரீத்ஸ்' என்கிற குஜராத்தி மொழித்திரைப்படம், சிறந்த ஆவண படம் பிரிவிலும், 'தி எலிபாண்ட் விஸ்பரெர்ஸ்' என்கிற திரைப்படமும், சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் போட்டியிட்டது.
சிறந்த டாக்குமெண்டரி திரைப்படத்திற்க்கான விருதை தவறவிட்ட 'ஆல் தட் பரீத்ஸ்'
ஆனால், 'ஆல் தட் பரீத்ஸ்' திரைப்படம் விருதைத் தவறவிட்டது. கடந்த 2009 -ஆம் ஆண்டில் வெளியான 'Slumdog Millionaire' படத்திற்கு பிறகு, ஆஸ்கார் விருதை இந்தியாவிற்கு கொண்டு வந்து பெருமைப்பட வைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 'சிறந்த டாக்குமெண்டரி திரைப்படம்' என்ற பிரிவில் 'Navalny' திரைப்படம் விருதை வென்றது.