Page Loader
" 'தளபதி 68' படத்திற்கு வாழ்த்து தெரிவித்த முதல் நபர் அஜித்": வெங்கட் பிரபு
'தளபதி 68' படத்திற்கு வாழ்த்து தெரிவித்த முதல் நபர் அஜித் - வெங்கட் பிரபு

" 'தளபதி 68' படத்திற்கு வாழ்த்து தெரிவித்த முதல் நபர் அஜித்": வெங்கட் பிரபு

எழுதியவர் Nivetha P
Aug 08, 2023
09:10 pm

செய்தி முன்னோட்டம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'. இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை எழுப்பியுள்ள நிலையில், இதன் படப்பிடிப்பு சென்னை, கேரளா, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் மிக மும்முரமாக நடத்தப்பட்டது. இறுதிக்கட்டத்தினை நெருங்கியுள்ள இப்படம் வரும் அக்டோபர் மாதம் ஆயுதப்பூஜைக்கு உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் விஜய்'ன் அடுத்த படம் 'தளபதி 68' குறித்து அண்மையில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. இப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் என்றும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்றும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியானது. இதற்கிடையே இப்பட இயக்குனர் வெங்கட் பிரபு. 'தளபதி 68'-க்கு முதலில் வாழ்த்து தெரிவித்ததே நடிகர் அஜித் தான் என்ற தகவலை பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

வெங்கட் பிரபு தகவல்