LOADING...
தளபதியின் 'ஜன நாயகன்' முதல் அஜித்தின் 'ஏகே 64' வரை...தீபாவளிக்கு அப்டேட்டுகளை அள்ளிவீசும் முன்னணி ஹீரோக்கள்!
தீபாவளிக்கு அப்டேட்டுகளை அள்ளிவீசும் முன்னணி ஹீரோக்கள்!

தளபதியின் 'ஜன நாயகன்' முதல் அஜித்தின் 'ஏகே 64' வரை...தீபாவளிக்கு அப்டேட்டுகளை அள்ளிவீசும் முன்னணி ஹீரோக்கள்!

எழுதியவர் Venkatalakshmi V
Oct 15, 2025
04:47 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையின்போது புதிய திரைப்படங்கள் வெளியாவதுடன், விரைவில் திரைக்கு வரவுள்ள பெரிய படங்களின் அப்டேட்டுகளும் வெளியாவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளிக்கு, 'ஜன நாயகன்', 'ஏகே 64' மற்றும் 'கருப்பு' ஆகிய திரைப்படங்களின் அப்டேட்டுகள் ரசிகர்களுக்கு விருந்தளிக்க தயாராக உள்ளன. அவை என்னென்ன அப்டேட்டுகள் என்பதை பார்ப்போம்:

விஜய்

ஜன நாயகன் அப்டேட்

நடிகர் விஜய்யின் கடைசி படமாக உருவாகி வரும் திரைப்படம் 'ஜன நாயகன்'. இப்படத்தை இயக்குவது எச். வினோத். படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளது அனிருத். இது அவர்கள் கூட்டணியில் உருவாகவுள்ள 4வது படமாகும். KVN புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம், 2026 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில், தீபாவளியன்று, அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள பாடலை பர்ஸ்ட் சிங்கிளாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அஜித்

AK 64 அப்டேட்

நடிகர் அஜித்தின் 64வது படமான, தற்காலிகமாக ஏகே 64 என அழைக்கப்படும் திரைப்படத்தின் அப்டேட் வர உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் உடன் அஜித் இணையும் அடுத்த படம் இது (இவர் 'குட் பேட் அக்லி' படத்தை இயக்கியவர்). இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார். அஜித் தற்போது கார் ரேசிங்கில் கவனம் செலுத்தி வருவதால், நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. எனினும் ரசிகர்களுக்காக தீபாவளி விருந்தாக இப்படத்தின் டைட்டில் குறித்த சர்ப்ரைஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சூர்யா

கருப்பு அப்டேட் 

நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கருப்பு. இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்கிறார். இப்படத்தின் இசையமைப்பாளர் தற்போது வைரலாகி வரும் இளம் தலைமுறை இசையமைப்பாளரான சாய் அபயங்கர். படத்தினை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு தயாரிக்கிறார். தீபாவளி பண்டிகையன்று கருப்பு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.