
நடிகர் அஜித்குமார் உடல்பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி
செய்தி முன்னோட்டம்
நடிகர் அஜித்குமார் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இணையத்தில் வெளியான செய்திபடி, அஜித்குமார் அவருடைய ரெகுலர் செக்-அப்பிற்காக அங்கே அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் தற்போது 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஸர்பைஜானில் முடிவடைந்ததை அடுத்து, அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த வாரம் துவங்க உள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
அதற்கு முன்னதாக ரெகுலர் ஃபுல் பாடி செக்அப் செய்துகொள்வதற்காகவே அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அஜித், சில தினங்களுக்கு முன்னர் தான் சென்னை திரும்பி இருந்தார்.
மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING || சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித்குமார் அனுமதி
— Thanthi TV (@ThanthiTV) March 7, 2024
வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வரும் அஜித் குமார்
அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக விரைவில்… pic.twitter.com/yiQjDAV4Eo