'விடாமுயற்சி'க்கு சென்சார் போர்டு U/A தரச்சான்று; ரிலீஸ் எப்போது?
செய்தி முன்னோட்டம்
நடிகர் அஜித் குமார் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வெளியீடு அறிவிக்கப்பட்டு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்படம், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) U/A சான்றிதழ் பெற்றுள்ளது.
இந்த சான்றிழ் தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்த இந்தப் படம், எதிர்பாராத காரணங்களால் தாமதமானது.
இப்போது, பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படம் ஜனவரி இறுதியில் திரையரங்குகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சான்றிதழ் விவரங்கள்
'விடாமுயற்சி' படத்திற்கு வெட்டுக்கள் இல்லாமல் சான்றிதழ் கிடைத்தது
படத்தின் வெளியீட்டு தாமதங்களுக்கான காரணங்கள் சரி செய்யப்பட்ட பிறகு சான்றிதழுக்காக படம் CBFCக்கு அனுப்பப்பட்டது.
இது எந்த வெட்டுக்களும் இல்லாமல் U/A சான்றிதழ் பெற்றுள்ளது.
இருப்பினும், சில வார்த்தைகள் ம்யூட் செய்யப்பட்டுள்ளது.
சென்சார் அறிக்கையின்படி படத்தின் ரன்டைம் சுமார் இரண்டு மணி நேரம் 30 நிமிடங்கள் என கூறப்படுகிறது.
இப்படம் பெரும்பாலும் ஜனவரி 23 அல்லது ஜனவரி 30 ஆகிய தேதிகளில் வெளியாகும் என்று வர்த்தக ஆய்வாளர் ஸ்ரீதர் பிள்ளை சூசகமாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தேதியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Vidaamuyarchi Censored - U/A
— Sreedhar Pillai (@sri50) January 9, 2025
Runtime - 2hrs 30Mins
Some cuss words muted
Release likely - Jan 23/30 pic.twitter.com/DBUs2924f4