
தமிழ்நாட்டில் ரூ.172.3 கோடி வசூலித்த அஜித்தின் 'குட் பேட் அக்லி'; OTT வெளியீடு எப்போது?
செய்தி முன்னோட்டம்
நடிகர் அஜித் குமாரின் சமீபத்திய வெளியீடான குட் பேட் அக்லி, பாக்ஸ் ஆபிஸில் பெரும் சாதனை படைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் உலகளவில் பெரும் வசூலை வாரிக்குவித்து வருகிறது.
வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் ₹28.5 கோடி நிகர வசூலை ஈட்டிய GBU கிட்டத்தட்ட 2 வார வெற்றிகரமான திரையரங்க திரையிடலுக்கு பின் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம், ரூ.172.3 கோடி வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
உலக அளவில் குட் பேட் அக்லி ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
OTT வெளியீடு
GBU ஓடிடி வெளியீடு எப்போது?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய, குட் பேட் அக்லி, 2 வாரங்கள் திரையரங்கில் ஓடிய நிலையில் இப்படத்தின் OTT வெளியீடு எப்போது வெளியாகும் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி வரும் மார்ச் 8 அன்று குட் பேட் அக்லி நெட்ஃபிலிக்ஸ்-இல் வெளியாகிறது.
GBUவில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ், யோகி பாபு , பிரியா பிரகாஷ் வாரியர், ஜாக்கி ஷெராஃப், டின்னு ஆனந்த், சுனில் வர்மா மற்றும் சாயாஜி ஷிண்டே ஆகியோர் உள்ளனர்.
இந்தப் படம் விமர்சகர்களிடமிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.