LOADING...
நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியானது

நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியானது

எழுதியவர் Sekar Chinnappan
Feb 28, 2025
07:05 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படம் ஏப்ரல் 10, 2025 அன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், த்ரிஷா, பிரசன்னா மற்றும் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். முன்னதாக, அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்தபோது இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. படத்தின் படப்பிடிப்பு வேகமாக முடிந்த நிலையில், பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் வெளியீட்டால், இந்த படம் ஒத்திவைக்கப்பட்டது.

புரமோஷன்

ஏப்ரல் வெளியீட்டிற்கான புரமோஷன் தொடக்கம்

தற்போது குட் பேட் அக்லி ஏப்ரல் 10 அன்று வெளியிடப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான புரமோஷனின் ஒரு பகுதியாக, படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகள், போஸ்டர்கள் மற்றும் அஜித்தின் தனித்துவமான தோற்றம் ஏற்கனவே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. இதற்கிடையே, படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு பிரமாண்டமான திரையரங்க அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடி ஆக்‌ஷன்கள் நிறைந்த இந்தப் படம், ஏப்ரல் மாதம் வெளியாகும் வரை ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும்.

ட்விட்டர் அஞ்சல்

டீசர்