Page Loader
ஸ்பெயின் பந்தய நிகழ்வில் கொடூரமான விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்தின் கார்; காயமின்றி தப்பினார் அஜித்
ஸ்பெயின் பந்தய நிகழ்வில் கொடூரமான விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்தின் கார்

ஸ்பெயின் பந்தய நிகழ்வில் கொடூரமான விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்தின் கார்; காயமின்றி தப்பினார் அஜித்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 23, 2025
11:53 am

செய்தி முன்னோட்டம்

ஸ்பெயினின் வலென்சியாவில் நடந்த போர்ஷே ஸ்பிரிண்ட் சேலஞ்ஜ் கார் பந்தயத்தின்போது நடிகர் அஜித் குமார் கடுமையான விபத்தை சந்தித்தார். போர்ச்சுகல் மற்றும் துபாயில் நடந்த சம்பவங்களுக்குப் பிறகு, இரண்டு மாதங்களில் இது அவரது மூன்றாவது விபதாக்கும். அதிவேக மோதலில் அவரது கார் பல முறை கவிழ்ந்த போதிலும், அஜித் காயமின்றி தப்பினார். அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா இதுகுறித்து பகிர்ந்துள்ள வீடியோவில், நடிகர் அஜித்தின் வாகனம் மற்ற கார்களுடன் மோதியதால் இரண்டு முறை விபத்துக்குள்ளானதைக் காட்டுகிறது. 5வது சுற்றில் அஜித் சிறப்பாக செயல்பட்டு 14வது இடத்தைப் பிடித்ததாகவும், ஆனால் 6வது சுற்றில் துரதிர்ஷ்டவசமாக இரண்டு முறை விபத்துக்குள்ளானதாகவும் சுரேஷ் சந்திரா கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

சுரேஷ் சந்திராவின் எக்ஸ் பதிவு

விடாமுயற்சி

அஜித்தின் விடாமுயற்சி வலிமையானது எனக் குறிப்பிட்ட சுரேஷ் சந்திரா 

இந்த விபத்து குறித்து சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள பதிவில் "அவரது விடாமுயற்சி வலிமையானது. மேலும், அவர் பந்தயத்தைத் தொடர மீண்டும் காயமின்றி வெளியே வந்தார்." என்று குறிப்பிட்டார். மேலும், ரசிகர்களின் ஆதரவு மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவித்தார். இதற்கிடையே, அஜித்தின் தொடர்ச்சியான விபத்துகள் ரசிகர்கள் மத்தியில் கவலையைத் தூண்டியுள்ளன. அவர்கள் அஜித்தை தனது பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தியுள்ளனர். நீண்ட காலமாக மோட்டார் விளையாட்டு மீதான ஆர்வத்திற்கு பெயர் பெற்ற நடிகர் அஜித், தற்போது 54 வயதில் தொழில்முறை பந்தய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஒரு அணியை உருவாக்கி அதில் போட்டியாளராகவும் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

அஜித் ரசிகரின் எக்ஸ் பதிவு