அஜித் குமார் நடிக்கும் 'டேர்டெவில்'! ஷாலினி தயாரிக்கும் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகின் முன்னனி நட்சத்திரமான நடிகர் அஜித் குமார் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 'டேர்டெவில்' (DAREDEVIL) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார். ரெட் மற்றும் வைட் பின்னணியில் தாயக்கட்டைகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டது போல் மிக வித்தியாசமான முறையில் இந்த திரைப்படத்தின் தலைப்பு போஸ்டரில் வடிவமைக்கப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஷாலினி
ஷாலினி அஜித் குமார் தயாரிப்பு
இந்த திரைப்படத்தை பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் ஷாலினி அஜித் குமார் தயாரிக்கிறார்.
அஜித் குமாரின் திரைப்பயணத்தில் அவரது குடும்பத்தினர் நேரடியாகத் தயாரிப்பில் களம் இறங்குவது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அனிருத் இசை
அனிருத் இசையமைப்பில் உருவாகும் புதிய படம்
இத்திரைப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
ஒளிப்பதிவாளராக அபினந்தன் ராமானுஜமும், படத்தொகுப்பாளராக விஜய் வேலுக்குட்டியும் பணியாற்றுகின்றனர்.
மேலும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைக்க, ஆடை வடிவமைப்பை அனு வர்தன் மேற்கொள்கிறார்.
இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#DareDevil - #AjithKumar #ShaliniAjithkumar #BraveHeartsProduction @Adhikravi @anirudhofficial @SureshChandraa @AbinandhanR @editorvijay @supremesundar #Subbhunaarayan @itsanuvardhan @kayoas13 @valentino_suren @Donechannel1 @AbdulNassarOffl @AMBANINSK#AK64 pic.twitter.com/ccUoL0Zltg
— Suresh Chandra (@SureshChandraa) August 3, 2026