
ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவாகவா? கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராயின் தோற்றம்
செய்தி முன்னோட்டம்
கேன்ஸ் திரைப்பட விழா 2025 இல் ஐஸ்வர்யா ராய் பச்சனின் தோற்றம் சமூக ஊடகங்களில் பரவலான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது அரச பாணி உடைக்காக மட்டுமல்லாமல், பாரம்பரிய வெள்ளை சேலை அணிந்து, தடித்த சிவப்பு நிற சிந்தூரத்தை நெற்றியில் இட்டிருந்தது கவனம் ஈர்த்துள்ளது.
சர்வதேச மேடையில் இந்திய கலாச்சாரத்தை கௌரவித்ததற்காக அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இருப்பினும், பல ரசிகர்களும் சமூக ஊடக பயனர்களும் அவரது இந்த நெற்றி வகிடில் திருமணமான பெண்கள் சிந்தூர் வைப்பது போன்று வந்ததற்கு கலாச்சார முக்கியத்துவத்தை விட மற்றொரு விஷயமும் உள்ளதாக நம்புகிறார்கள்.
ஆபரேஷன் சிந்தூர்
ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவு?
ஐஸ்வர்யா ராயின் சிந்தூர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ஆயுதப்படைகள் நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இருக்கலாம் என்று ஊகங்களை நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர்.
சமூக ஊடக பயனர்கள் அவரது தோற்றத்தை அமைதியான, ஆனால் தேசிய நோக்கத்துடன் ஒற்றுமையின் அடையாளமாக விளக்கி, தளங்களின் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, வேறு சிலர் அவரது தோற்றத்தை அபிஷேக் பச்சனுடனான அவரது திருமணத்தைச் சுற்றியுள்ள தொடர்ச்சியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது நிலைப்பாட்டை நுட்பமாக தெரிவித்துள்ளதாகவும் கூறி வருகின்றனர்.
எது உண்மையாக இருந்தாலும், காரணத்தை அவரே வெளியிடாதவரை, இந்த ஊகங்கள் சமூக வலைதளங்களில் ரெக்கை கட்டி பறந்து கொண்டே இருக்கும்.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகும் புகைப்படம்
This is her tribute to operation Sindoor & Indian soldiers at Cannes 🇮🇳
— Aishwarya Rai Fan ❤ (@in_aishwarya) May 21, 2025
Proud to be her fan #AishwaryaRaiBachchan #Cannes2025 @adgpi #OperationSindooor pic.twitter.com/FUlu5qHidj