'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தில் நடித்த அடா ஷர்மாவிற்கு விபத்து
இந்த மாத துவக்கத்தில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் பெண்கள், மூளை சலவை செய்யப்பட்டு, மத மாற்றம் செய்யப்பட்டு தீவிரவாத கூட்டத்திற்குள் சேர்க்கப்படுகின்றனர் என்பதுதான் படத்தின் மூலகதை. இந்த கதை பிரிவினைவாதத்தை தூண்டக்கூடும் என்று கருதி, தமிழ்நாடு, மேற்குவங்காளம் உட்பட பல இந்திய மாநிலங்கள், இந்த திரைப்படத்தை திரையிட தடை விதித்தது. இருப்பினும், பாஜக ஆளும் மாநிலங்களில், இந்த திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. பரவலான வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தில், முக்கியமான முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பாலிவுட் நடிகையான அடா சர்மா. இவருக்கு இரு தினங்களுக்கு முன்னர் விபத்து ஏற்பட்டது என செய்திகள் பரவ துவங்கியதும், அவர். தான் நலமாக உள்ளதாக ட்வீட் போட்டுள்ளார்.