சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நடிகை வரலட்சுமி செய்த வினோதமான வேண்டுதல்!
தென் இந்தியாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை வரலட்சுமி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகையாக இருந்து வரும் நடிகை வரலட்சுமி சமீபத்தில் ட்விட்டரில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெயித்துவிட்டதால் இந்த வேண்டுதலை நான் நிறைவேற்றுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். "அடுத்த ஒரு மாதத்திற்கு non-veg சாப்பிட மாட்டேன்" என்பது தான் அவரின் சுவாரசியமான வேண்டுதல் ஆகும். தனக்கு சைவம் பிடிக்காது என்றும், எப்போதும் non-veg தான் விரும்பி சாப்பிடுவேன் என்றும், பல பேட்டிகளில் முன்பே வரலட்சுமி தெரிவித்திருந்தார். தற்போது வரலட்சுமி இந்த வேண்டுதலை நிறைவேற்ற போவதாக கூறி, ட்விட்டரில் பதிவு செய்த படம் வைரலாகி வருகிறது.