அடுத்த செய்திக் கட்டுரை
நடிகர் மோகனுக்கு ஜோடியாகும் வனிதா விஜயகுமார்
எழுதியவர்
Venkatalakshmi V
Jul 04, 2023
09:53 am
செய்தி முன்னோட்டம்
80'களில், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் நடிகர் மோகன்.
பல வெற்றி படங்களை தந்து, ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்தார். 'மைக்' மோகன் எனக்கூறும் அளவிற்கு, அநேக படங்களில் இவர் மைக் பிடித்து பாடும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும்.
அதற்கேற்றாற் போல, இவர் படங்களில் பாடல்கள் அனைத்தும் மிகப்பிரபலம்.
கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்ட மோகன், இடையில் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்து இருந்தார்.
'நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன்' என தற்போது 'ஹரா' என்ற படம் மூலம் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை, விஜய் ஸ்ரீ என்பவர் இயக்குகிறார்.
இந்த படத்தில் இவருடன் ஜோடியாக நடிக்கப்போவது நடிகை வனிதா விஜயகுமார். இது குறித்து நேற்று வனிதா ஒரு இன்ஸ்டா பதிவை இட்டுள்ளார்.