அமலாக்கத்துறையினர் விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா; என்ன நடந்தது?
செய்தி முன்னோட்டம்
பிரபல நடிகை தமன்னா பாட்டியா மீது அமலாக்கத்துறை 5 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.
இது ஐபிஎல் சூதாட்ட விளம்பர செயலியை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் வழக்கில், தமன்னா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் அவர் குவஹாத்தியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு நேற்று ஆஜராகினார்.
தமன்னா, சட்டவிரோத ஐபிஎல் சூதாட்டத்துடன் தொடர்புடைய விளம்பரத்தில் நடித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதற்கான விசாரணை உள்பட, அமலாக்கத் துறை அண்மையில் வியாழக்கிழமை நடிகைக்கு சம்மன் அனுப்பியது.
ஆன்லைன் சூதாட்ட செயலில் நடித்ததற்காக தமன்னாவுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது; இதற்கு முன்பு, அவர் மகாராஷ்டிராவில் உள்ள அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustNow | நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை!#TamannaahBhatia | #FairplayApp | #IPLMatches | #ED pic.twitter.com/FBtoeEK5az
— JANANESAN News (@JananesaN_NewS) October 18, 2024
விசாரணை
5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட விசாரணை
அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு மதியம் 1:25 மணி அளவில் தமன்னா வந்தார். விசாரணைக்கு தந்தையுடன் ஆஜர் ஆனார் அவர். விசாரணை ஐந்து மணிநேரத்திற்கு மேலாக நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விசாரணை தொடர்பாக அமலாக்கத் துறை அல்லது தமன்னாவின் தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் இதுவரை வெளியாகவில்லை. ஆனாலும், இந்தியாவில் சூதாட்டச் சட்டங்களை மீறிய செயலிக்கான விளம்பர நடவடிக்கைகளில் அவர் பங்கேற்றதைக் குறிக்கும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுகிறது. இது போன்ற பிரபலங்களை பயன்படுத்தி, இந்த தளங்களை பிரபலப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.