LOADING...
நயன்தாராவை தொடர்ந்து, பிசினஸ்வுமனாக மாறிய நடிகை சினேகா
நடிகைகள் பலரும் தற்போது நடிப்பு தொழிலை தாண்டி பல சைடு பிசினஸ்களில் இறங்கி வருகின்றனர்

நயன்தாராவை தொடர்ந்து, பிசினஸ்வுமனாக மாறிய நடிகை சினேகா

எழுதியவர் Venkatalakshmi V
Feb 08, 2024
03:39 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை சினேகா தற்போது புதிய பிசினஸ் துவக்கியுள்ளார். 'சினேஹாலயா' என்ற பெயரில் பட்டுப்புடவை பிசினஸ் துவங்கியுள்ளார். இந்த பிசினஸ்-ஐ வரும் பிப்ரவரி 12ஆம் தேதி இனிதே துவக்கவுள்ளதாக அனைவருக்கும் அழைப்பிதழையும் அனுப்பி வருகிறார் சினேகா. அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதோடு, சிநேகாவின் கணவரான நடிகர் பிரசன்னாவும் இது பற்றி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். முன்னதாக நடிகைகள் பலரும் தற்போது நடிப்பு தொழிலை தாண்டி பல சைடு பிசினஸ்களில் இறங்கி வருகின்றனர். ஒரு சிலர் படத்தயாரிப்பு பக்கம் ஒதுங்கிய நிலையில், நடிகை நயன்தாரா அழகு சாதன பொருட்கள், சானிடரி நாப்கின் போன்ற பிசினஸ் செய்கிறார். நடிகை சமந்தாவும் துணிக்கடை பிசினஸில் இறங்கியுள்ளார். அதேவழியில் சினேகாவும் புடவை பிசினஸ் செய்யப்போகிறார்.

ட்விட்டர் அஞ்சல்

தொழிலதிபர் சினேகா