நடிகை ரஷ்மிகாவிடம் துணிகர கொள்ளை; அதிர்ச்சியான ரசிகர்கள்
கோலிவுட் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி சினிமாவிலும் தற்போது பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. 'கீதா கோவிந்தம்' படம் மூலமாக தென்னிந்தியா முழுவதும் பிரபலமான இவர், 'புஷ்பா' திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். 'நேஷனல் க்ரஷ்' என செல்லமாகவும் அழைக்கப்பட்டார். தொடர்ந்து ஹிந்தி பட வாய்ப்புகள் குவியவே, வரிசையாக ஹிந்தி படங்களிலும் நடிக்க தொடங்கினார் ரஷ்மிகா. இந்நிலையில், அவருடைய மேனேஜர், ரஷ்மிகா அறியாவண்ணம் அவரிடமிருந்து 80 லட்ச ரூபாய் சுருட்டியுள்ளாராம். இதனால் கோபம் அடைந்த ரஷ்மிகா அவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்மிகா கூடவே இருந்து கொண்டு, இப்படிப்பட்ட துணிகர கொள்ளையில் அவரின் மேனேஜர் ஈடுபட்ட செய்தி அறிந்து, அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.