புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்: மேடையில் கண்கலங்கிய நடிகை பிரியா பவானிசங்கர்
நடிகை பிரியா பவானிசங்கர், சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக நுழைந்தார். பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரின் மூலம் பிரபலமானார். அதன்பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வரவே, தொடர்ந்து நடித்து வருகிறார். S.J.சூர்யா, ஹரிஷ் கல்யாண், ஜெயம் ரவி என பல இளம் நடிகர்களுடன், ஹீரோயினாக நடித்தார். இதுமட்டுமின்றி, 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில், தனுஷுடன் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. இந்த நிலையில், ஒரு தனியார் மருத்துவமனை நடத்திய விழா ஒன்றில் பங்கேற்று பேசிய பிரியா பவானிசங்கர், தனது தாய்க்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்ததால், குணப்படுத்திவிடலாலாமென மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்தார். தாயை பற்றி பேசும்போது, மேடையிலேயே கண்கலங்கிய அவரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.