LOADING...
திருமண செய்தியை அறிவித்தார் நடிகை நிவேதா பெத்துராஜ்; மாப்பிளை யார்?
திருமண செய்தியை அறிவித்தார் நடிகை நிவேதா பெத்துராஜ்

திருமண செய்தியை அறிவித்தார் நடிகை நிவேதா பெத்துராஜ்; மாப்பிளை யார்?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 28, 2025
09:10 am

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவில் 'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ், தனது நீண்ட நாள் காதலன் ரஜித் இப்ரானுடன் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள நிவேதா, விரைவில் திருமண செய்தி குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, நிவேதா ஒரு பிரபல அரசியல் பிரமுகருடன் உறவில் இருப்பதாகவும், அவர் துபாயில் ரூ.50 கோடியில் வீடு வாங்கித் தந்ததாகவும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியிருந்தன. இது மட்டுமில்லாமல் இதுநாள் பரவி வந்த மற்ற காதல் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மாப்பிள்ளை

யார் மாப்பிள்ளை?

நிவேதா பெத்துராஜின் வருங்கால கணவர் ரஜித் இப்ரான், தொழிலதிபரும் மாடலிங் துறையைச் சேர்ந்தவரும் ஆவார். இருவருக்கும் இந்த ஆண்டின் இறுதியில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேட்மிண்டன் மற்றும் ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்ட நிவேதா, பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், சங்கத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதோடு தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிச்சயதார்த்த அறிவிப்பைத் தொடர்ந்து, திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post