Page Loader
விட்டிலிகோ நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை மம்தா மோகன்தாஸ்
நடிகை மம்தா மோகன்தாஸ்க்கு விட்டிலிகோ நோய் பாதிப்பு

விட்டிலிகோ நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை மம்தா மோகன்தாஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 16, 2023
06:12 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை மம்தா மோகன்தாஸ், தனக்கு விட்டிலிகோ எனப்படும் ஆட்டோ இம்யூன் நோய் இருப்பதாக, தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை பதிவிட்ட மம்தா, 'நிறம் இழந்து வருகிறேன்' என்று எழுதி இருந்தார். மம்தா மோகன்தாஸ் புற்றுநோயில் இருந்து மீண்டவர். தற்போது விடிலிகோவால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த அவரது ரசிகர்கள், அவரை இதிலிருந்து மீண்டு வருவார் என ஊக்கப்படுத்தி உள்ளனர். மம்தா மோகன்தாஸ், 2005 ஆம் ஆண்டு, மலையாளத் திரைப்படமான மயூகம் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். தமிழில் விஷாலின் சிவப்பதிகாரம் மூலம் அறிமுகமானார். பின்னர், குரு என் ஆளு, தடையற தாக்க, எனிமீ போன்ற படங்களில் நடித்துள்ளார். மம்தா ஒரு பின்னணி பாடகியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Instagram அஞ்சல்

நடிகை மம்தா மோகன்தாஸ்