மும்பை மாநகரில் ஆட்டோவில் பயணித்த நடிகை கீர்த்தி சுரேஷ்
கடந்த 2016ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் 'தெறி'. இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் வருண் தவண், கீர்த்தி சுரேஷ், வாமிகா நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இப்படத்தினை சினி ஒன் சினிமாஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தோடு இணைந்து அட்லீ மனைவியான பிரியா ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் மூலம் இணைந்து தயாரிக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. மேலும், இப்படம் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடவேண்டியவை. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்துவரும் நிலையில், நேற்று(செப்.,23)இரவு கீர்த்தி சுரேஷ் மற்றும் வருண் தவண் ஆட்டோவில் வலம் வந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.