
மீண்டும் நடிகர் விஜய்யுடன் கிசுகிசுக்கப்படும் கீர்த்தி சுரேஷ்
செய்தி முன்னோட்டம்
நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து புதுப்புது கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார்.
ஆரம்ப காலத்தில், காமெடி நடிகர் சதீஷுடன் காதல், திருமணம் என கிசுகிசுக்கள் வந்தது.
அது ஓய்ந்தபிறகு, கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜயுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.
அதன் பிறகு, கீர்த்தி சுரேஷிற்கு ஒரு ரகசிய காதலன் இருப்பதாகவும், அவர், கீர்த்தியின் பள்ளி தோழன் எனவும் கூறப்பட்டது.
தற்போது, கீர்த்தியின் நடிப்பில் 'தசரா' திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டிருந்த போது, ஒரு புதிய போட்டோ இணையத்தில் வைரலானது.
அதில், விரல்களில் 'V' என்ற முத்திரை வைத்ததாகவும், அது விஜய்யை குறிக்கிறது என்று கிசுகிசு மறுபடியும் கிளம்பியுள்ளது.
ஆனால், உண்மையில், அது 'தசரா' திரைப்படத்தில், 'வெண்ணிலா' என்ற கீர்த்தியின் கதாபாத்திரத்தின் பெயர் ஆகும்.
ட்விட்டர் அஞ்சல்
கிசுகிசுக்களுக்கு காரணமான புகைப்படம்
Vennela from #Dasara ❤️🎨@KeerthyOfficial #DasaraFromTomorrow #KeerthySuresh pic.twitter.com/2jrpWzsKfw
— Devendra 🎨 (@dev22s) March 29, 2023