நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யப் போகிறாரா? தாயார் மேனகா சுரேஷ் தகவல்
80'களில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் மேனகா. அவரின் புதல்வியான கீர்த்தி சுரேஷ், தற்போது கோலிவுட்டில் மட்டுமல்லாமல், மலையாளத்திலும், தெலுங்கு பட உலகிலும் கோலோச்சும் நடிகையாக உள்ளார். அவரின் திருமணம் குறித்து வதந்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில், சென்ற வாரம் அவரது கல்யாணத்தை பற்றிய மேலும் ஒரு வதந்தி இணையதளத்தில் தீயாக பரவியது. கீர்த்தி சுரேஷ், தன்னுடைய பால்யகாலத்து சிநேகிதர் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடை பெற போவதாகவும் கூறப்பட்டது. அதோடு, அந்த நபரை, நடிகர் விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும், அவர் ஒரு தொழிலதிபர் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், அந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா பதில் அளித்துள்ளார்.
திருமணம் குறித்த வெளியான தகவல் பொய்யென கூறிய மேனகா
"பரபரப்புக்காகக் கிளப்பி விடப்படும் செய்தி இது. இது மாதிரி வெளியாகிற எந்தச் செய்தியையும் பார்க்கக் கூட நாங்கள் விரும்புவதில்லை. கீர்த்தியின் திருமணம் தொடர்பான சோஷியல் மீடியா தீனிக்கு எங்களுடைய பதில் இதுதான்" எனக்கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கீர்த்தி சுரேஷ் கடைசியாக தமிழில் செல்வராகவனுடன் இணைந்து 'சாணிக்காயிதம்' என்ற படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில், மகேஷ் பாபுவுடன், 'சர்க்காரு வாரி பாட்டா' என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் நானியுடன், 'தசரா' படத்திலும், தமிழில் உதயநிதியுடன், 'மாமன்னன்' படத்திலும் நடித்துள்ளார். மேலும், 'ரிவால்வர் ரீட்டா' என்ற புதிய படம் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார்.