Page Loader
"ஹிந்தி படவுலகை விட, தென்னிந்திய சினிமாவில் ஒழுக்கமும், நெறிமுறைகளும் உள்ளது": காஜல் அகர்வால்
தென்னிந்தியா சினிமாவை புகழ்ந்துள்ள காஜல் அகர்வால்

"ஹிந்தி படவுலகை விட, தென்னிந்திய சினிமாவில் ஒழுக்கமும், நெறிமுறைகளும் உள்ளது": காஜல் அகர்வால்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 31, 2023
05:34 pm

செய்தி முன்னோட்டம்

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் காஜல் அகர்வால். சினிமாவிற்குள் நுழைய தீர்மானித்ததும், அவர் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தார். அதன் பிறகு ஒரு ஹிந்தி படத்தில், துணை நடிகையாக நடித்தார். அதன் பின்னர், தெலுங்கு படவுலகில் நுழைந்தவர், தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க துவங்கினார். தமிழ், தெலுங்கு படவுலகில், முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார். காஜல் அகர்வால் நேற்று (மார்ச் 30), 'Rising India' என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டார். அதில், அவரிடம் தென்னிந்திய சினிமாவையும், ஹிந்தி சினிமாவையும் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. மிகவும் தைரியமாக, அதற்கு அவர் அளித்த பதில், பலராலும் வரவேற்கபட்டது. "தென்னிந்திய படவுலகில், ஒழுக்கமும், நெறிமுறைகளும் கடைபிடிக்கப்படுகிறது. அது ஹிந்தி சினிமாவில் இல்லை" என்று ஒரு 'பளிச்' பதிலை கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

தென்னிந்தியா சினிமாவை புகழ்ந்த காஜல் அகர்வால்

ட்விட்டர் அஞ்சல்

காஜல் அகர்வால் பதில்