அடுத்த செய்திக் கட்டுரை

நடிகை இலியானாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது
எழுதியவர்
Sindhuja SM
Aug 06, 2023
12:49 pm
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய்க்கு ஜோடியாக 'நண்பன்' திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை இலியானாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நடிகை இலியானா டி'குரூஸ் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக நேற்று அறிவித்தார்.
தனக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்ததாகவும், குழந்தைக்கு 'கோவா பீனிக்ஸ் டோலன்' என்று பெயர் வைத்திருப்பதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"எங்கள் அன்பான பையனை உலகிற்கு வரவேற்பதில் நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது. எங்களது இதயம் நிறைந்துவிட்டது" என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்த அவர், தற்போது தனக்கு குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
செய்தி இத்துடன் முடிவடைந்தது