
"காதல் வைத்து, காதல் வைத்து காத்திருந்தேன் " நடிகை பாவனாவின் பிறந்த நாள்!
செய்தி முன்னோட்டம்
இன்று நடிகை பாவனாவின் பிறந்தநாள். ஜூன் 6ஆம் தேதி, 1986ஆம் ஆண்டு 'கார்த்திகா மேனன்' என்ற பெயருடன் பிறந்த பாவனா, சிறு வயது முதலே படங்களில் நடிக்கும் ஆர்வம் கொண்டிருந்தார்.
மலையாள திரைப்படம் நம்மால்: 12 ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது, மலையாள படத்தில் நடிகையாகும் வாய்ப்பு கிடைத்தது. 'நம்மால்' என்ற படத்தில் 2002ஆம் ஆண்டு நடித்தார். பிறகு தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வாய்ப்புகளை பெற்றார்.
சித்திரம் பேசுதடி: தமிழில் மிஷ்கின் இயக்கிய, 'சித்திரம் பேசுதடி' படத்தில் பாவனா அறிமுகமானார். நடிகர் நரேன் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். வித்தியாசமான கதையுடன் பார்வையாளர்களை அசரவைத்தார் மிஷ்கின்.
Bhavana birthday
மீண்டும் ரீஎன்ட்ரி ஆகும் பாவனா!
தீபாவளி: 2007 இல் வெளிவந்த இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, ரகுவரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் கதாநாயகியாக தனது நடிப்பு திறனை வெளிபடுத்தி தமிழ் மக்களின் விருப்பமான நடிகையானர்.
அசல்: 2010 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார். சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான சமீரா ரெட்டி, பிரபு ஆகியோரும் நடித்திருந்தனர்.
ஜெயம் கொண்டான்: நடிகர் வினய் உடன் மதுரை பெண்ணாக, சொந்த குரலில் பேசி நடித்திருந்தார் பாவனா.
இடையில் நடிப்பிற்கு இடைவெளி விட்டிருந்த பாவனா, தற்போது மீண்டும் நடிக்க வருகிறார். அது அவருடைய 86வது திரைப்படம். அந்த படத்திற்கு, 'THE DOOR' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு இன்று அறிவித்துள்ளது.