ஹாலிவுட் நடிகரை திருமணம் செய்யும் நடிகை எமி ஜாக்சன்
செய்தி முன்னோட்டம்
'மதராசப்பட்டினம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுலகில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.
அதன் பின்னர் ஐ, கெத்து, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்த எமி ஜாக்சன், பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தினால் படவுலகில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது, அருண் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'மிஷன் அத்தியாயம் 1' என்னும் படத்தில் இவர் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதனிடையே இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பணயிட்டோவை காதலித்து வந்த எமி ஜாக்சனுக்கு அவருடன் நிச்சயதார்த்தமும் நடந்தது.
கடந்த 2019ம் ஆண்டு இவர்களுக்கு ஆண்ட்ரியாஸ் என்னும் ஆண் குழந்தை பிறந்தது.
இவர்கள் திருமணம் நடக்கவிருந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
எமி
தனது மகனை படப்பிடிப்புகளுக்கு அழைத்து செல்லும் எமி ஜாக்சன்
இந்நிலையில் எமி ஜாக்சன் தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்தியா வந்த இவர்கள் இருவரும் ஜெய்ப்பூர் சென்று பல்வேறு பகுதிகளை கண்டு களித்துள்ளனர்.
இது குறித்து எமி ஜாக்சன், தாங்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தாங்கள் இருவரும் சிறந்த சூழலில் தற்போது உள்ளதாகவும், எட் வெஸ்ட்விக் தனது உணர்வுகளில் கலந்தவர் என்றும் கூறியுள்ளார்.
மேலும் நடிகை எமி ஜாக்சன் தனது மகன் இந்த உலகம் குறித்து தெரிந்துக்கொள்வதற்காக படப்பிடிப்பு தளங்களுக்கு அழைத்து செல்வதாகவும் கூறியுள்ளார்.