Page Loader
அன்னையர் தினத்தன்று குட் நியூஸ் சொன்ன நடிகை அபிராமி 
தாயானதை அறிவித்த நடிகை அபிராமி

அன்னையர் தினத்தன்று குட் நியூஸ் சொன்ன நடிகை அபிராமி 

எழுதியவர் Venkatalakshmi V
May 15, 2023
05:03 pm

செய்தி முன்னோட்டம்

'வானவில்' படத்தின் மூலமாக கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் அபிராமி. அதன் பின்னர், சார்லி சாப்ளின், சமுத்திரம் போன்ற படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டாலும், கமல்ஹாசனுக்கு ஜோடியாக விருமாண்டி படத்தின் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக மாறினார். இருப்பினும், மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றவர், அங்கேயே செட்டில் ஆகி விட்டார். 2009-ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணமும் செய்து கொண்டார். நீண்ட இடைவேளைக்கு பின்னர், 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி ஆனார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் அபிராமி, இந்த அன்னையர் தினத்தன்று, தான் தாயான விஷயத்தை உலகிற்கு அறிவித்துள்ளார். சென்ற ஆண்டு, 'கல்கி' என்ற பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளதாகவும், அது தன் வாழ்க்கையை மாற்றியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Instagram அஞ்சல்

குட் நியூஸ் சொன்ன அபிராமி